செய்திகள் :

வேங்கைவயல் : `20ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல்; 23ம் தேதி அவகாசம் கேட்பு ஏன்?’ - அண்ணாமலை சந்தேகம்

post image

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

இதில் குற்றவாளிகள் யார் என்பதைக் கண்டறிய நீண்டகாலம் ஆனதால் காவல்துறை மீதும் தமிழக அரசு மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன. இறுதியாக இந்த வழக்கில் விசாரணையை முடித்து கடந்த 20-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்றுபேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பட்டியலின நபர்கள் மீதே குற்றம்சுமத்தப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை, "வேங்கைவயல் மக்களுக்காக தமிழக பாஜக நடத்தும் சட்டப் போராட்டம். வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும்." என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணாமலை சொல்வதென்ன?

``பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

annamalai

கடந்த டிசம்பர் 24. 2022 அன்று மேல்நிலை நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில், மக்கள் பயன்படுத்திய குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, வேங்கைவயல் கிராமத்து இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது, தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர். மேலும், மேல்நிலை நீர்த்தொட்டியின் உள்ளே கழிவுகள் மிதப்பதையும் கண்டறிந்தனர்.

உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கை, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியது திமுக அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே, மார்க்ஸ் ரவீந்திரன் அவர்கள், பாஜகவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி அவர்கள் மூலம், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் தலைமையில் சிபிஐ விசாரணை அல்லது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி 24.02.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். மாண்புமிகு உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதை அடுத்து, உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வேங்கை வயல்

கடந்த 29.03.2023 அன்று, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். சத்தியநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த ஒரு நபர் ஆணையம், கடந்த 14.09.2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் விசாரணையை முழுமையாக முடித்து, இறுதி அறிக்கையை இன்று வரை தாக்கல் செய்யவில்லை.

கடந்த 16.04.2024 அன்று, இந்த வழக்கு தொடர்பான பொதுநல மனுக்கள், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது.

வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் தமிழகக் காவல்துறை பொறுப்பின்றிச் செயல்படுகிறது என்றும் எடுத்துக் கூறப்பட்டதை அடுத்து, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.வி. கங்காபூர்வாலா அவர்கள் அமர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன்னர், விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது.

ஆனால், அதற்குப் பின்னரும், ஒரு நபர் ஆணையமோ, சிபிசிஐடியோ விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை என்ற நிலையில், கடந்த 23.01.2025 அன்று. குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று. சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

வேங்கைவயல்

இதனிடையே, 23.01.2025 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்தப் பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20.01.2025 அன்றே, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மீது 20.01.2025 அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், 23.01.2025 அன்று, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி அவகாசம் கேட்டது ஏன்?

குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு.” என குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.இந... மேலும் பார்க்க

Trump: `அதிபரான டிரம்பினால் பகுதி நேர வேலையை விட்டு அல்லல்படும் மாணவர்கள்' - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் 'எப்போது... என்ன சட்டம் கொண்டுவரப் போகிறார்?' என்று உலக நாடுகள் தொடங்கி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் வரை ஒருவித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.டிரம்ப் தன... மேலும் பார்க்க

"நாங்க ரெடி. .. வாங்க சந்திப்போம்!”-எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறிய மாவட்டமாக இரு... மேலும் பார்க்க

TVK : 'வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியே தாமதம்; சிபிஐ இன்னும் தாமதம் ஆகும்' - விஜய் சொல்வதென்ன?

வேங்கை வயலில் நடந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதுக்குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டது. தற்போது ... மேலும் பார்க்க

ECR கலைஞர் பன்னாட்டு அரங்கம்: "அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து அமைக்கக்கூடாது..." - சீமான் எதிர்ப்பு

``5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 525 கோடி செலவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வ... மேலும் பார்க்க

Periyar: "சீமான் வியாபார நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறார்..." - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க