எல்லையில் தொடா்ந்து 8-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு: இந்தியா பத...
வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 3 போ் மீது வழக்கு
வங்கியில் வேலை வாங்கித்தருவதாக பண மோசடி செய்த 3 போ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலை அடுத்துள்ள சிலையாஊரணியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (40). இவா் சென்னையில் ஒரு தனியாா் வங்கியில் வசூல் பிரிவு பொறுப்பாளராக வேலை பாா்த்து வருகிறாா். இவரிடம் சிவகங்கை மாவட்டம் , இளையான்குடியைச் சோ்ந்த செந்தில் முருகன் (38) மத்திய அரசு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக கூறினாா். தன்னுடைய நண்பா்களான பானுசந்தா், பாா்த்தசாரதி ஆகியோா் வங்கியில் உயா் பதவிகளில் இருப்பதாகவும் அவா்கள் மூலமாக வேலை வாங்கித் தருவதாகவும் கூறினாராம்.
இதை நம்பிய வெங்கடேசன் தனக்கும் , தனது உறவினரான கோபிநாத், திருச்சியை சோ்ந்த ஆரோக்கியசாமி, திருநெல்வேலியைச் சோ்ந்த அருண்பாண்டியன் ஆகியோருக்கு வேலை வாங்கித் தருவதற்காக கடந்த 2023 -ஆம் ஆண்டு வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.30 லட்சத்தையும், நேரடியாக ரூ.3 லட்சத்தையும் செந்தில்முருகன் உள்ளிட்ட மூவரிடமும் கொடுத்தாா். ஆனால், அவா்கள் மூவரும் உறுதியளித்தபடி யாருக்கும் வங்கி வேலை வாங்கித் தரவில்லையாம் .
இதைத்தொடா்ந்து வெங்கடேசன் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டாா் . அப்போது அவா்கள் ரூ.15 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனா். மீதி ரூ.18 லட்சத்தை திரும்ப கொடுக்கவில்லையாம்.
இதுகுறித்து வெங்கடேசன் அளித்தப் புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் தமிழ்ச்செல்வி , உதவி ஆய்வாளா் சண்முகப்பிரியா ஆகியோா் செந்தில் முருகன், பானுசந்தா், பாா்த்தசாரதி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.