செய்திகள் :

ஷ்ரேயாஸ் ஐயரின் உலகத்தரமான பேட்டிங்..! வில்லியம்சன் புகழாரம்!

post image

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கை நியூசி. வீரர் கேன் வில்லியம்சன் புகழ்ந்து பேசியுள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

ஜியோஸ்டார் எக்ஸ்பெர்ட் நிகழ்ச்சியில் வில்லியம்சன் பேசியதாவது:

வலிமைமிக்க பேட்டர்

சிலகாலமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகள் பிரச்னையாக இருந்தன. ஆனால், தற்போது அவர் அதை புத்திசாலித்தனமாக சமாளித்துள்ளார். கிரீஸில் உள்ளே இருந்து முன்னங்காலில் எடையைக் குறைத்து ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொற்குக்கிறார்.

ஷ்ரேயாஸின் திறமை எது வியக்க வைக்கிறது என்றால் அவரால் மீண்டும் தனது எடையை முன்னோக்கி வரவைக்கிறார். இது பந்துவீச்சாளர்களுக்கு ஷார்ட் பந்துகளையும் ஃபுல்லராகவும் வீசவும் கடினத்தை உருவாக்குகிறது.

ஷ்ரேயாஸ் தற்போது திடலின் அனைத்து பக்கங்களிலும் ஷாட்டுகளை அடிக்கிறார். அது அவரை மிகவும் வலிமைமிக்க பேட்டராக மாற்றியுள்ளது.

உயர்தரமான ஆட்டம்

ஷ்ரேயாஸின் இந்த 97 ரன்கள் உயர்தரமான ஆட்டத்தைக் குறிக்கிறது. முதல் பந்திலிருந்தே அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்து எங்குசென்று விழ வேண்டுமோ அங்கு சரியாக அடித்தார்.

அவுட் சைடு ஆஃப் ஸ்டம்பில் பந்தினை வீசினால் அதையும் கவர்சைடில் சிக்ஸர் அடிக்கிறார். அதுவும் உலகின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அடிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரஷித் கான் ஓவரில் அடித்து ஆடினார். இந்தப் போட்டியில் அது மிகவும் சவாலன விஷயம்.

அணித் தலைவராக நம்.3இல் களமிறங்கி, போட்டிக்கான ரிதமை தொடங்கி வைத்து எதிரணியினரின் முக்கியமான வீரர்களின் ஓவர்களில் அடித்து நொறுக்கியது முக்கியமானது. இந்த இன்னிங்ஸ் உலகத்திலேயே மிகவும் சிறந்தது என்றார்.

அணியில் இணைந்த ஹார்திக் பாண்டியா; முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத ஹார்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார்.18-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்த... மேலும் பார்க்க

தோனி முன்னதாக களமிறங்க வேண்டும்: வாட்சன் பேட்டி

நேற்றிரவு சேப்பாக்கில் நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியைச் சந்தித்தது.முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம்... மேலும் பார்க்க

தோல்வியிலும் நற்செய்தி: சிஎஸ்கேவுக்காக தோனி புதிய சாதனை!

சேப்பாக்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், தோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதலில் பேட்டிங் செய்த ... மேலும் பார்க்க

தோல்விக்குக் காரணம் தோனியா? சிஎஸ்கே ரசிகர்கள் விமர்சனம்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள். முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்த... மேலும் பார்க்க

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்... மேலும் பார்க்க