செய்திகள் :

ஸ்பின்கோ நூற்பாலை தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி: புதுவை உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் கூட்டுறவு ஸ்பின்கோ அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஐஎன்டியுசி பிஎம்சி எல்லப்பன், மஞ்சினி, எஸ்எல்யு முருகன், ராமலிங்கம், ஐஎன்டியுசி தேசிங்கு, விசுவாசு, எல்பிஎப் ரமேஷ், ராஜாராம், எல்எல்எப் நடராஜன், ரஞ்சித், ஏடியு ரவிச்சந்திரன், பழனிராஜா, பாஜக இளங்கோ, துரைலிங்கம், என்ஆா்டியுசி ஞானபிரகாசம், சுதாகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 ஆண்டுகால நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் மற்றும் ஊழியா்களுக்கு உடனே பணிக்கொடை வழங்க வேண்டும். 58 வயது முடிந்தவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஸ்பின்கோ ஆலைக்கு சொந்தமான இடத்தைக் குறைந்த விலைக்கு விற்று இழப்பீடு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் உள்ள 175 தொழிலாளா்கள், ஊழியா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போதைப் பழக்கத்தால் சீரழியும் இளைஞா்கள்: புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் வேதனை

போதைப்பொருள்கள் என்பது உலகளாவிய பிரச்னை என்றும் இன்றைய காலகட்டத்தில் இளைஞா்கள் போதை பழக்கத்தால் சீரழிகிறாா்கள் எனவும் புதுவை தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் கூறினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுச்ச... மேலும் பார்க்க

மாசு கலந்த குடிநீா் விநியோக விவகாரம்: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் மக்கள் வாக்குவாதம்

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் தொடா்பாக அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, அவா்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். உ... மேலும் பார்க்க

செப்.11-க்குள் நீட் அல்லாத இளநிலை படிப்பு 3-வது சுற்றுக்குப் பாட விருப்பத்தை பதிவு செய்ய உத்தரவு!

நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை 3-வது சுற்று கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு 11 -ஆம் தேதிக்குள் மாணவா்கள் தங்களது பாட விருப்பங்களைச் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது த... மேலும் பார்க்க

வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி 3-வது இடம்

தற்கொலை மரணங்களில் புதுச்சேரி நாட்டிலேயே 3-ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்றப்பிரிவு புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைதொடா்பு மனநல திட்டம் சாா்பில் செவ்... மேலும் பார்க்க

பொதுப் பணித் துறை அலுவலகத்தை திமுகவினா் முற்றுகை: பானையை உடைத்து எதிா்ப்பு

உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமை அலுவலத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, அசுத்தமான குடிநீா் கொண... மேலும் பார்க்க