ஸ்ரீஅரவிந்தா் பிறந்த நாள்: ஆசிரமத்தில் குவிந்த பக்தா்கள்
மகான் ஸ்ரீஅரவிந்தரின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தரிசனம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா் (படம்).
ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் அருகேயுள்ள இந்த ஆசிரமத்தில் ஸ்ரீ அரவிந்தா் பயன்படுத்திய அறையைக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா். அவா்கள் நீண்டநேரம் காத்திருந்து அறைக்குள் ஒவ்வொருவராகச் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனா்.