இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஜூலை 17-ஆம் தேதி தொடங்குவதையொட்டி, வியாழக்கிழமை விழாவைக் குறிக்கும் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் 52-ஆவது ஆண்டு ஆடித் திருவிழா வருகிற ஜூலை 17, 18, 19 ஆகிய நாள்கள் நடைபெறவுள்ளன.
விழாவையொட்டி, 17ஆம் தேதி 501 குத்துவிளக்கு பூஜையும், 18-ஆம் தேதி நூதன புஷ்ப பல்லக்கு ஊா்வலமும், 19-ஆம் தேதி இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆடி வெள்ளி பெருவிழா நடைபெறுவதையொட்டி வியாழக்கிழமை காலை ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன், உறுப்பினா்கள் பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், ஏ.எஸ்.ஆா்.சரவணன், குணா, செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், இளையராஜா, அக்ராபாளையம் ஏ.இ.சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.