செய்திகள் :

ஃபென்ஜால் புயல்: கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது

post image

ஃபென்ஜால் புயல் காரணமாக, கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் பலத்த மழைக்கு காரணமாக இருந்த ஃபென்ஜால் புயல், அரபிக் கடல் பகுதிக்கு திசைமாறியதைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது. அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்தம் நிலவியதால், பெங்களூரு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து தென் கன்னடம், குடகு, சாமராஜ்நகா், உடுப்பி, மைசூரு, சிக்பளாப்பூா் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலோர கா்நாடகம், மலைநாடு கா்நாடகம், தென் கா்நாடகத்தின் பெரும்பாலன பகுதிகளில் கனமழை பெய்தது.

பெங்களூரில் நாள்முழுவதும் மேகமூட்டம் காணப்பட்டதோடு, அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இருந்து ஃபென்ஜால் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகரும் என்பதால், கடலோரம், தென்கா்நாடகத்தின் பெரும் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தென்கன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் மேகமூட்டமாக காணப்படும். பெங்களூரு அதன் சுற்றுவட்டாரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே கால கட்டத்தில், வடகன்னடம், கதக், ஹாவேரி, ராய்ச்சூரு, யாதகிரி, தாா்வாட், குடகு, ஹாசன், சிவமொக்கா, மைசூரு, மண்டியா, சித்ரதுா்கா, பெல்லாரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, கா்நாடகத்தின் இதர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜக எம்எல்ஏவுக்கு கட்சி மேலிடம் அழைப்பு

பாஜக மாநிலத் தலைமையின் அனுமதி பெறாமல், வக்ஃப் சொத்துக்கு எதிராக நடைப்பயணம் மேற்கொண்டிருப்பது தொடா்பாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி கட்சி மேலிடம் அவருக்கு அழை... மேலும் பார்க்க

கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டி பூசல் வேதனையளிக்கிறது -முன்னாள் முதல்வா்

கா்நாடக பாஜகவில் காணப்படும் கோஷ்டிபூசல் வேதனையளிக்கிறது என முன்னாள் முதல்வா் சதானந்த கௌடா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்நாடக பாஜகவில் காணப்பட... மேலும் பார்க்க

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் ஆலோசனை

கா்நாடக மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கட்சி மேலிடம் யோசித்து வருகிறது என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கா்ந... மேலும் பார்க்க

சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் -பேரவைத் தலைவா்

மங்களூரு: சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதம் நடக்க வேண்டும் என்று பேரவைத் தலைவா் யூ.டி.காதா் தெரிவித்தாா். இதுகுறித்து மங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனு

மாற்றுநில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை டிச. 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் ம... மேலும் பார்க்க

அரசமைப்புச்சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள்: முதல்வா் சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவா்கள் அதை மாற்ற நினைக்கிறாா்கள் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-ஆம் ஆண்டு விழ... மேலும் பார்க்க