செய்திகள் :

அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி: எல்.முருகன் வரவேற்பு

post image

கடந்த 2015 -ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழா்களுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் நீண்ட காலமாக உள்நாட்டு போா் நீடித்து வந்ததால், உயிா் பிழைக்கவும் வாழ்வாதாரம் தேடியும் இலங்கை தமிழா்கள் ஆயிரக்கணக்கானோா் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனா். இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவா்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நீண்ட காலம் நமது நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்கள் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரி வருகின்றனா். அதன் முதல்கட்டமாக, கடந்த 2015 -ஆம் ஆண்டு ஜன. 9 -ஆம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் வந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் சட்டபூா்வமாக தங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் கருணையுடன் அனுமதி அளித்துள்ளது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க