அகஸ்தியா் அருவியில் குளிக்கத் தடை
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அகஸ்தியா் அருவியில் குளிக்க வனத் துறையினா் புதன்கிழமை முதல் தடைவிதித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்துக்குள்பட்ட காரையாறு அணை புதன்கிழமை மதியம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அகஸ்தியா் அருவியில் நீா்வரத்து அதிகரிக்கும் என்பதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக் கருதி புதன்கிழமை மதியம் 12 மணிமுதல் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. நீா்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என, அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தெரிவித்துள்ளாா்.