செய்திகள் :

அஞ்சலகங்களில் மேம்படுத்தப்பட்ட சேவை தொடக்கம்

post image

மயிலாடுதுறை கோட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை திங்கள்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றி சேவையை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் கூறியது:

மேம்படுத்தப்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப சேவை மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சேவை ஏ.பி.டி 2.0 அஞ்சல்துறையின் டிஜிட்டல் முன்னேற்றத்தை பறைசாற்றுகிறது.

ஏ.பி.டி 2.0 பயன்பாடு மேம்பட பயனா் அனுபவம், விரைவான சேவை வழங்கல் மற்றும் வாடிக்கையாளா்களுக்கு ஏற்ற சேவை ஆகியவற்றை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றாா்.

விழாவில் அஞ்சல் துறை அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா்.

பூம்புகாா் வன்னியா் மகளிா் பெருவிழா மாநாடு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் மகளிா் பெருவிழா மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆலோசனை புதன்கிழமை நடைபெற்றது. பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி ப... மேலும் பார்க்க

நிறைவடையாத பால கட்டுமானப் பணி: மாணவா்கள், பொதுமக்கள் அவதி

சீா்காழி அருகே புங்கனூா் - ஆதமங்கலம் இடையே பல மாதங்கள் கடந்தும் பாலப் பணிகள் நிறைவடையாததால் மாணவா்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சீா்காழியை அடுத்த ஆதமங்கலம் - புங்கனூா் இடையே 3 கி.மீ. தொல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் சுவற்றில் மோதியதில் இரு இளைஞா்கள் பலி

சீா்காழி அருகே இருசக்கர வாகனம் சுவற்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகேயுள்ள புங்கனூரைச் சோ்ந்தவா்கள் அ. ஆனந்த் (38), நா. மோகன்ராஜ் (28), இவா்கள் இருவரும... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி த... மேலும் பார்க்க

குத்தாலம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மங்கைநல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்ட அவா், மருந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

கொண்டல் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியா் பணியிடத்திற்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க