செய்திகள் :

அடகு வைக்க செல்லும்போது காணமல் போன கம்மல்... சாதுர்யமாக மீட்டு கொடுத்த ஊராட்சி துணை தலைவர்!

post image

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள சேரம்பாடி, பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. தான் அணிந்திருந்த தங்க காதணிகளை குடும்ப சூழ்நிலை காரணமாக அடகு வைப்பதாற்காக சேரம்பாடி கடைவீதிக்கு கொண்டு சென்றிருக்கிறார். சேரங்கோடு ஊராட்சி பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லாத காரணத்தால் ஊராட்சி அலுவலகத்தில் சுற்றுவட்டார மக்கள் முறையிட சென்றுள்ளனர். மல்லிகாவையும் அழைத்துள்ளனர்.

தங்க நகையை பத்திரமாக வைத்திருக்குமாறு மகன் கையில் கொடுத்துவிட்டு குடிநீர் பிரச்னைக்கு மக்களோடு சேர்ந்து குரல் கொடுக்கச் சென்றிருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது மகன் கையில் நகை இல்லை. அடகு வைக்க கொண்டு வந்த தங்க நகை தொலைந்தால் தாயும் மகனும் சேரம்பாடி கடை வீதியில் கதறி அழுதிருக்கிறார்கள். பல மணி நேரமாக தேடி கிடைக்காமல் சோர்ந்திருக்கிறார்கள்.

நகை ஒப்படைப்பு

இதைக் கேள்விபட்டு நிகழ்விடத்திற்கு வந்த சேரம்பாடி ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ்‌. 'கம்மலை எடுத்து வைத்திருப்பவரது வீடியோ சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறது. காவல்துறையில் புகார் அளிப்பதற்குள் ஊராட்சி அலுவலகத்தில் வந்து ரகசியமாக கொடுத்து விடுங்கள்' என இவராகவே அறிவிப்பை விடுத்திருக்கிறார். இதைக் கேட்டு பதறிய நபர் ஒருவர் 'தன்னை மன்னித்து விடுங்கள். அடையாளத்தை வெளியில் சொல்லாதீர்கள்' என சந்திரபோஸிடம் நகையை ரகசியமாக கொடுத்திருக்கிறார்.

அந்த நபரை கடுமையாக எச்சரித்து அனுப்பிய சந்திரபோஸ், மல்லிகா கையில் நகையை பத்திரமாக ஒப்படைத்தார். ஆனால், உண்மையில் சி‌‌.சி.டி.வி யில் எதுவும் பதிவாகவில்லை. அவராகவே சாதுர்யமாக யோசித்து நகையை மீட்டு கொடுத்ததை அறிந்து மக்கள் பாராட்டி வருகின்றனர்.

``காய்ச்சல்'னு போனோம்; இப்ப உயிருக்குப் போராடுறா!" - 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

"யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட... ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்த... மேலும் பார்க்க

’வேண்டாம்’ இப்போது எப்படியிருக்கிறார்... ரூ.22 லட்சம் சம்பளத்தில் ஜப்பானுக்கு சென்றுவிட்டாரா?

`வேண்டாம்’ இப்போது எப்படி இருக்கிறார்?திருத்தணியைச் சேர்ந்த 'வேண்டாம்’ என்கிற மாணவியை நினைவிருக்கிறதா..? கொரோனாவுக்கு முன்னால் பரபரப்பாக பேசப்பட்ட சிலரில் மிக முக்கியமானவர் இந்த மாணவி. இவருடைய’வேண்டாம... மேலும் பார்க்க

Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி வழக்கமான ஒரு ஞாயிறு தினமாகவே இருந்திருக்கும், அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்காமலிருந்திருந்தால். ஆனால், சுமத்திரா தீவில் ஆழ்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கம் அங்கு மட்டுமல்ல... மேலும் பார்க்க

ஒரு ஜாக்கெட் தைக்கிறதுக்கு ஒரு ரூபாதான் கூலி- ஒரு டெய்லரின் கதை

தைக்க வேண்டிய துணிகளைப் போட்டு வெட்டுறதுக்கு ஒரு மர டேபிள், தையல் மெஷின்கள், கடை நிறைய கலர் கலரா துணிகள்... இவற்றுக்கு நடுவுல சையத் மதர் வேலைபார்க்கிறதுக்கு கொஞ்சம் இடம். இவ்ளோ தான் சையத் மதரோட டெய்லர... மேலும் பார்க்க

ஒரு போலீஸ்காரரின் கருணைக் கனவு... நிறைவேற்றி வரும் மகள் | Old Age Home | Human Story

அப்பாவின் கனவு...அப்பாவின் கனவை நிறைவேற்றுவதற்காக அனகாபுத்தூரில் இலவச முதியோர் இல்லம் நடத்தி வருகிறார் ஜெயசித்ரா. ஆண், பெண் என 30 பேர் அந்த இல்லத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். வார இறுதி நாள் ஒன்றில்,... மேலும் பார்க்க

தார்ப்பாய் மூடிய வீடு; ஓதம் ஏறிய தரை-மாற்றுத்திறனாளி மகன்களை பராமரித்து வரும் முதியவரின் துயரக் கதை

இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களைப் பராமரித்து வாழ்ந்து வரும் 80 வயது முதியவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரைக் காண்பதற்காகச் சென்றோம்.தார்ப்பாய் மூடிய குடிசை வீடும், ஓதம் ஏறிய தரையும், உடைபாடுகளுடன் இ... மேலும் பார்க்க