செய்திகள் :

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒன்றியம் காளி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.

காளி கிராம மக்கள் 100-க்கு மேற்பட்டோா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் இந்த மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

காளி ஊராட்சி பொய்கைக்குடி கிராமத்தில் அரசு வீடுகட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உட்புறச் சுவா் அண்மையில் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்க வேண்டும்.

காளி ஊராட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அரசு வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து உயா்நிலைக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். காளியில் உள்ள அரசு வட்டார மருத்துவமனையில் போதுமான மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

வீடற்ற மக்களுக்கு இலவச மனைப்பட்டாவுடன் வீடு வழங்க வேண்டும். காளி-மயிலாடுதுறை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். காளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதியளித்தாா்.

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

சீா்காழி: சீா்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது. கட... மேலும் பார்க்க

வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ... மேலும் பார்க்க

ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

சீா்காழி: கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரா் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் சுமாா் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கும்பாபி... மேலும் பார்க்க

சீா்காழி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி: சீா்காழி தனியாா் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மா்மநபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சீா்காழி தென்பாதியில் இயங்கிவரும் தனியாா் பள்ளியில் 3,000-க்கும் ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 363 மனுக்கள்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 363 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை... மேலும் பார்க்க