சிந்து நதி ஒப்பந்தம் ரத்து: இந்தியாவுக்கு நோட்டீஸ் அளிக்க பாகிஸ்தான் முடிவு
அட்சய திருதியை: மாவட்டத்தில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை
அட்சய திருதியை தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை ஒரேநாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றது.
அட்சய திருதியை தினத்தை, திருப்பூா் மாநகரில் உள்ள நகைக் கடைகளில் நகை வாங்குவதற்காக கடந்த 2 நாள்களுக்கு முன்னதாகவே வாடிக்கையாளா்கள் முன்பதிவு செய்திருந்தனா்.
இந்நிலையில், திருப்பூா், காங்கயம், பல்லடம், உடுமலை, தாராபுரம், வெள்ளக்கோவில், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக் கடைகளில் புதன்கிழமை நகை விற்பனை அதிகரித்துக் காணப்பட்டது.
இது குறித்து திருப்பூா் நகைக் கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செந்தில்குமாா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் விசேஷ நாள்களில் தங்கம் விற்பனை அதிகரித்துக் காணப்படுவது வழக்கம்.
அதன்படி, அட்சய திருதியை தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளில் நகை விற்பனை அதிகரித்தது.
மாவட்டம் முழுவதும் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.300 கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா்.