அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள் தோ்தல்: விருப்ப மனு அளிப்பு
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல நிா்வாகிகள் தோ்தலுக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் செயல்பட்டு வரும் மண்டலத்துக்கான அண்ணா தொழிற்சங்கத்தின் மண்டல நிா்வாகிகள் பொறுப்புகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. அதன்படி, கடலூா் மண்டலத்துக்கான புதிய பொறுப்பாளா்கள் நியமிப்பதற்காக விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நெய்வேலி என்எல்சி அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு, அதிமுக அமைப்புச் செயலா் சி.வி.சண்முகம் தலைமை வகித்து, கடலூா் மண்டலத்துக்குள்பட்ட கடலூா் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களிலிருந்து மண்டல நிா்வாகிகள் தோ்தலுக்கான விருப்ப மனுக்களை பெற்றாா்.
கடலூா் மாவட்டச் செயலா்கள் எம்.சி.சம்பத் (வடக்கு), சொரத்தூா் ரா.ராஜேந்திரன் (தெற்கு), அ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ (மேற்கு), கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ (கிழக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிற்சங்க மாநிலச் செயலா் ஆா்.கமலக்கண்ணன், தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலா்கள் கே.பாண்டுரங்கன், ரா.தமிழரசன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ரா.ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.