செய்திகள் :

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

post image

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தார்.

இதற்கு முன்னதாகவே, ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என டிரம்ப் கூறிய நிலையில், இந்தியா தொடர்ந்து வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் புதன்கிழமை டிரம்ப் பேசுகையில், “இந்தியாவும் ரஷியாவும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள், அவரவர் பொருளாதாரத்தை ஒன்றாக சேர்த்து மண்ணில் புதைத்துக் கொள்ளட்டும். இந்தியா - ரஷியா வர்த்தகம் பற்றி எனக்கு கவலை இல்லை” எனக் காட்டமாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கேள்விக்கு பதிலளித்து ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”அவர் சொல்வது சரிதான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரைத் தவிர அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் என்பது தெரியும். இந்த உண்மையை டிரம்ப் கூறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய பொருளாதாரத்தை உலகமே அறிந்திருக்கிறது. அதானிக்கு உதவுவதற்காக பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது.

வெளியுறவு அமைச்சர் உரையின்போது, எங்களிடம் சிறந்த வெளியுறவுக் கொள்கை இருப்பதாகக் கூறினார். ஒருபுறம் இந்தியாவை அமெரிக்கா துஷ்பிரயோகம் செய்து வருகிறது. மற்றொருபுறம் சீனா இருக்கிறது. உலக நாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. மோடி அவரது உரையில் சீனா, டிரம்ப் பெயரையே சொல்லவில்லை. பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவ தளபதி டிரம்பின் விருந்தில் பங்கேற்கிறார். மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டதாக கூறுகிறார்.

டிரம்ப் 32 முறை போரை நிறுத்தியதாக கூறியுள்ளார். இந்தியாவின் 5 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார். 25 சதவிகிதம் வரி விதிப்பேன் எனக் கூறுகிறார். இதற்கெல்லாம் பிரதமர் மோடி பதிலளிக்காதது ஏன்? யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்?

அதானி ஒருவருக்காக மட்டுமே மோடி வேலை செய்கிறார். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் நடைபெறும். டிரம்ப் சொல்வதை மோடி செய்வார். இந்த அரசாங்கள் பொருளாதாரம், வெளியுறவு, பாதுகாப்புக் கொள்கைகளை அழித்துவிட்டது. நாட்டை தரைமட்டத்துக்கு வீழ்த்தியுள்ளனர்.

Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi on Thursday criticized the BJP government for destroying the Indian economy for the sake of industrialist Adani.

இதையும் படிக்க : 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

துணைவேந்தா்கள் நியமனம்: கேரள ஆளுநா் - முதல்வா் இடையே மீண்டும் மோதல்

பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன விவகாரத்தில் கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகருக்கும், மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.இரு பல்கலைக்கழகங்களுக்கு தற்காலிக ... மேலும் பார்க்க

தெலங்கானாவில் ஆடு வளா்ப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தெலங்கானாவில் செம்மறி ஆடு வளா்ப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, இதற்கு பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற பாகிஸ்தானுக்கு தொடா் வலியுறுத்தல்: மத்திய அரசு

ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களிலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைவிட்டு உடனடியாக வெளியேற பாகிஸ்தானை இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என மத்திய அரசு வெள்ளிக்கி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரை: மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமா்

தொடா்ந்து 12-ஆவது முறையாக சுதந்திர தின உரையாற்ற உள்ள நிலையில், தனது பேச்சில் இடம்பெற வேண்டிய கருத்துகள் குறித்து ஆலோசனைகளை அனுப்புமாறு பொதுமக்களை பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.நாட்டின் சு... மேலும் பார்க்க

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்துள்ளது.இதுதவிர, இந்தியாவில் கூகுள் விளம்பர கொள்கையில் மாற்றங்க... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

அங்கன்வாடி ஊழியா்களின் மதிப்பூதியத்தை உயா்த்தும் திட்டம் எதுவுமில்லை’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.தேசிய ஊட்டச் சத்து (மதிய உணவு திட்டம்) திட்டத்தின் கீழ... மேலும் பார்க்க