``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று கறாராக ஓரம் கட்டிவிட்டு, பல்வேறு முரண்பாடுகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என்று வியூகம் வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் அதிகாரப்போட்டி
இந்தச் சூழலில் அதிமுக தேர்தலில் வென்றாலும் பாஜகவே தலைமை வகிக்கும் என்ற சிக்கல் ஒருபுறம்; சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஓரணியில் அதிமுகவை இணைக்கும் அதிகாரப்போட்டி மறுபுறம் என மாட்டிக்கொண்டு தவிக்கிறார் இபிஎஸ்.
செங்கோட்டையன் vs இபிஎஸ்
இதற்கிடையில் இப்போது இபிஎஸுக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மூலமாக பெரிய சிக்கல் வந்திருக்கிறது. இபிஎஸ் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, அதிமுகவின் பல நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படுவதில்லை என்று செங்கோட்டையன் இபிஎஸ் உடன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமலே இருந்து வந்தார். இருவருக்குமிடையே நீண்ட நாள்காக சத்தமில்லாத உரசல் இருந்து வந்தது.
கடந்த வாரம், கோபிசெட்டிப்பாளையத்திலுள்ள தனது அலுவலகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை வைத்து செங்கோட்டையன், செப்டம்பர் 5-ம் தேதி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மனம் திறந்து பேசுவதாக அறிவித்திருந்தார்.
இபிஎஸ் மீதான அதிருப்தி, அதிமுகவில் இருக்கும் உட்கட்சிப் பிரச்னை, பாஜகவுடனான கூட்டணி சிக்கல்கள், சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனின் அதிகாரப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசவுள்ளதாக அதிமுக தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்டன.
செங்கோட்டையன் பிரஸ் மீட்
இந்நிலையில் இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் அலுவலகத்தின் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs