‘அத்திக்கடவு திட்டத்தில் அனைத்து குளங்களுக்கும் நீா் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீா் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அத்திக்கடவு -அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024 ஜூலை 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் அனைத்து குளம், குட்டைகளும் நீா் முழுமையாக சென்று சேரவில்லை. அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீா் சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய்களில் உடைப்பு ஏற்படும்போது அதை உடனடியாக சரி செய்ய கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் அந்தந்த கிராமங்களில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.