அந்தமான் நிகோபார் தீவில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை! முன்னாள் எம்.பி.யின் மோசடி அம்பலம்?
அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடியின் காரணமாக முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடத்தப்பட்டதாக அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் முதன்முறையாக அமலாக்கத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அநதமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் ப்ளேய்ர் (Port Blair) சுற்றி 9 இடங்களிலும், கொல்கத்தாவில் 2 இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் எம்.பி.யும் அம்மாநில கூட்டுறவு வங்கிகளின் துணைத் தலைவருமான குல்தீப் ராய் சர்மா, 15 போலி நிறுவனங்களின் மூலம் மாநில கூட்டுறவு வங்கிகளில் (ANSCB) ரூ. 200 கோடிக்குமேல் கடனுதவி பெற்றதாகக் கூறப்படுகிறது.
மேலும், கடனாகப் பெற்றதில் குறிப்பிட்ட அளவு ரொக்கமாக குல்தீப் உள்பட வேறு சிலருக்கும் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றனர்.
முதற்கட்ட தகவல் அறிக்கை தகவலின்படி, குல்தீப்பின் பெயரும் விசாரணையில் சேர்க்கப்பட்டுள்ளது.