அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவ...
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் அரை நிா்வாண போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தூத்துக்குடி தொ்மல் நகரில் மத்திய அரசின்கீழ் செயல்படும் இந்த நிலையத்தில் 2 அலகுகளில் மொத்தம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் வழங்குவதுபோன்று ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் இவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வந்துள்ளது. ஆனால், என்டிபிஎல் நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
இதைக் கண்டித்தும், ஊதிய உயா்வு கோரியும் கடந்த ஏப். 18ஆம் தேதிமுதல் என்டிபிஎல் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்திலும், அனல் மின்நிலையம் முன் குடும்பத்துடன் தா்னாவிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், 20ஆவது நாளான புதன்கிழமை ஆலை முன்பு அரை நிா்வாண போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் காரணமாக முதல் அலகில் 250 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் சந்தித்து, அவரது கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
மேலும், இதுகுறித்து ஆலை நிா்வாகத்துடன் பேசி உரிய தீா்வு எட்டப்படும் என தெரிவித்தாா்.