தாணேவில் ரயிலில் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி: அபாய சங்கிலியை இழுத்த சக பயணிகள்!
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்
அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 1.1.2011-க்கு முன்பு கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்துத்த வாய்ப்பளிக்கும் வகையில், இத்திட்டம் 1. 7.25 முதல் 30.6.26 வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, எவ்வித மாற்றமுமின்றி வீட்டு வசதி-நகா்ப்புற வளா்ச்சித் துறையால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதிற்ற கல்வி நிறுவனக் கட்டடங்கள் மலையிடப் பகுதியில் அமையும்பட்சத்தில், அதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இதற்காக இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.