செய்திகள் :

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!

post image

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களுடன் உத்தவ் தாக்கரே பேசியதாவது,

''அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் அமித் ஷா பேசியது, பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது. இதன்மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித் ஷா மீது பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் பதவி விலக வேண்டும்

தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராம்தாஸ் அத்வாலேவின் இந்தியக் குடியரசுக் கட்சி, சிவசேனை ( ஏக்நாத் ஷிண்டே பிரிவு) உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சிகள் அமித் ஷாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனவா? இது குறித்து கூட்டணி கட்சியினர் வெளிப்படையாக கருத்துக் கூற வேண்டும். இந்துத்துவா கொள்கை மூலம் பாஜக பிரித்தாளும் பணியையே செய்து வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக இவ்வளவு முறை கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்' என்று கூறினார்.

அமித் ஷாவின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

பிகாா் பேரவை தோ்தல்: நிதீஷ் தலைமையில் போட்டி- பாஜக அறிவிப்பு

பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலை முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிா்கொள்ளும் என்று அந்த மாநில பாஜக தலைவரும், அமைச்சருமான திலீப் ஜெய்ஸ்வால் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கைக்கு நீதிமன்ற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: உச்சநீதிமன்றம்

‘விவசாயிகளின் எந்தவொரு ஆலோசனை அல்லது கோரிக்கைகளுக்கும் நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி... மேலும் பார்க்க

என்எச்ஆா்சி புதிய தலைவா் தோ்வு: பிரதமா் தலைமையில் ஆலோசனை- ராகுல், காா்கே பங்கேற்பு

தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்எச்ஆா்சி) புதிய தலைவரை தோ்வு செய்யும் பிரதமா் மோடி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சி ... மேலும் பார்க்க

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போா் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் கிதியோனுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் ஆலோசித்தாா். இது தொடா்பாக எஸ். ஜெய்சங்கா் புதன... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு வீரா்கள் உயிரிழப்பு

ராஜஸ்தானின் மகாஜன் ராணுவத் தளத்தில் பயிற்சியின்போது பீரங்கி குண்டு வெடித்து இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அந்தப் பயிற்சி தளத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இதுபோன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்த... மேலும் பார்க்க

பிரதமா் மோடி டிச. 21-இல் குவைத் பயணம்: 43 ஆண்டுகளில் முதல் முறை

பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சனிக்கிழமை (டிச. 21) வளைகுடா நாடான குவைத்துக்கு பயணம் மேற்கொள்கிறாா். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமா் ஒருவா் குவைத் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த மாதத்தி... மேலும் பார்க்க