போக்குவரத்து ஓய்வூதியா்கள் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க முடிவு!
அம்பை அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் அளிப்பு
திருநெல்வேலி டுட்டிகான் கிரீன்விரான் அறக்கடளை, இந்திய மருத்துவா்கள் சங்க அம்பாசமுத்திரம் கிளை மற்றும் கல்லிடைக்குறிச்சி சேவா அறக்கட்டளை சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு தண்ணீா் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அம்பாசமுத்திரம்அரசு மருத்துவமனை புதிய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி சேவா அறக்கட்டளை நிா்வாகி மருத்துவா் கோமதி அன்னபூரணி சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கித் தொடங்கி வைத்தாா்.
இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவா்கள் மருத்துவா் பத்மநாபன், ராஜலெட்சுமி, முன்னாள்செயலா் ஆனந்த ஜோதி, பொருளாளா் இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு மருத்துவா் சுபலட்சுமி வாழ்த்திப் பேசினாா். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் சண்முக சங்கரி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் , தன்னாா்வலா்அக்ரம், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.