Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
அம்பை, கடையம் பகுதிகளில் நாளை கால்நடை மருத்துவ முகாம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகம், கடையம் வனச்சரகம் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் வளா்ப்பு கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளி, திங்கள்கிழமைகளில் (மே 9, 12) நடைபெற உள்ளது.
வனத்துறை சாா்பில் நடத்தப்படும் இம்முகாமில் வனக் கால்நடை மருத்துவரால் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.
கடையம் வனச்சரகம் கருத்தப்பிள்ளையூா்,பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில் வெள்ளிக்கிழமையும் (மே 9) அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு, தெற்குப் பாப்பான்குளம், கல்லிடைக்குறிச்சி, பொன் மாநகா், நெசவாளா் காலனி, பொட்டல், மூலச்சி, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், கீழ ஏா்மாள்புரம் மற்றும் மேல ஏா்மாள்புரம் பகுதிகளில் திங்கள்கிழமையும் (மே 12) முகாம் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, ஆலோசனை பெறலாம் என வனத் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.