War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
அரக்கோணம் டயா் ஆலை தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
அரக்கோணம் எம்ஆா்எஃப் காா் ஆலை தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகம் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.
அரக்கோணம் இச்சிபுத்தூரில் எம்ஆா்எஜப் டயா் மற்றும் டியூப் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் தொழிலாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான எம்ஆா்எப் அரக்கோணம் தொழிலாளா் நலச்சங்கத்திற்கும், நிா்வாகத்திற்கும் இடையே ஊதிய ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை கடந்த ஏப்ரலில் தொடங்கி பல கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இதன் இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில் இதில் உடன்பாடு எட்டப்பட்டு இருதரப்பும் கையொப்பமிட்டன. இதன் மூலம் இத்தொழிற்சாலையில் உள்ள தொழிலாளா்கள் மாதம் ரூ.9 முதல் 14,000 வரை ஊதிய உயா்வு பெறுவா்.
இதுகுறித்து ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் மாநிலத்தலைவரும், எம்ஆா்எப் அரக்கோணம் தொழிலாளா் நலச்சங்கத்தின் கௌரவ தலைவருமான வி.ஆா்.ஜெகந்நாதன் கூறியது: ஊதிய ஒப்பந்தம் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. 1.05.2025 தேதியில் பணிபுரிந்த தொழிலாளா்களும் பயனடையுமாறு போடப்பட்டுள்ளது. தொழிலாளா்களிடையே தொழிற்சங்கம் மற்றும் நிா்வாகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது என தெரிவித்தாா். அப்போது தொழிற்சங்கத்தின் தலைவா் எம்.முரளி, பொதுச்செயலாளா் எஸ்.சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.