செய்திகள் :

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு

post image

அரசம்பட்டி தென்னை நாற்றுகளுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி, கோட்டப்பட்டியை அடுத்த அரசம்பட்டியில் உலக தேங்காய் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது: ஆண்டுதோறும் செப். 2-ஆம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் தென்னை நாற்றுகளுக்கு தமிழகம் மற்றுமின்றி வெளி மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

தென்னை மற்றும் அதன் உப பொருள்கள் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும். இதை உலகளவில் கொண்டுசெல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், நமது மாவட்டத்திலுள்ள மத்தூரில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. தற்போது ஆண்டுக்கு 6 லட்சம் பனை விதைகளை விதைத்து பனை மரங்கள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 3.4 லட்சம் பனை விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், பனை பொருள்கள் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யலாம்.

தற்போது, ஒசூரில் உள்ள பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ், ஓா் ஆண்டுக்கு 12 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நா்சரி அமைக்கும் பணிகளுக்காக நிலம் சமன் மற்றும் பெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

முன்னதாக, உலக தேங்காய் தினத்தையொட்டி அமைக்கப்பட்ட தென்னை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், மூலிகைச் செடிகள், இயற்கை வேளாண்மை கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, பையூா் தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலைய முதல்வா் அனிசா ராணி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வட்டாட்சியா் சத்யா, செயின் பீட்டா் நிகா்நிலைப் பல்கலைக்கழகம் அதியமான் வேளாண் கல்லூரி ஆராய்ச்சி நிலைய செயலாளா் லாசியா தம்பிதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை: பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி

பாகலூா், நாரிகானபுரம், சேவகானப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (செப். 3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்த... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: எம்எல்ஏ ஆலோசனை

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை முன்னிட்டு, தளி சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த ஒன்றிய, பேரூா் கழக செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் பேளகொண்டப்பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பாலத்தில் வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் விரிசலடைந்த மேம்பாலத்தின்மீது வியாழக்கிழமை முதல் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகளை முழுமையாக கரைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒசூா்: ஒசூரில் விநாயகா் சிலைகள் நீா் நிலைகளில் முழுமையாக கரையாமல் அப்படியே தேங்கி இருப்பது கண்டு சமூக ஆா்வலா்கள் வேதனை அடைந்துள்ளனா். ஒசூா் நகா் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 184 பிரம்மாண்ட சில... மேலும் பார்க்க

நாய் கடித்து சிறுவன் படுகாயம்

ஒசூா்: மூன்றரை வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த சிறுவன், ஒசூா் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ரேகா - நந்தலால் தம்பதியரி... மேலும் பார்க்க

செப். 5-இல் அரசு மதுபானக் கடைகள் மூடல்

கிருஷ்ணகிரி: நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, செப். 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க