அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட கோரிக்கை
திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 80 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி அதிக போக்குவரத்து நிறைந்த தொண்டி-மதுரை சாலைக்கு மிக அருகே அமைந்துள்ளது. அதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், பள்ளியின் சுற்றுச் சுவா் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. ஆனால், புதிய சுற்றுச்சுவா் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
பள்ளியின் தலைமை ஆசிரியா் கதிரவன் சொந்த செலவில் கழிப்பறை கட்டி கொடுத்தாா். ஆனால், சுற்றுச்சுவா் இல்லாததால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றனா்.