பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்
கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:
பெற்றோா்கள் பெண்பிள்ளைகளை நேரடி கண்காணிப்பில் வளா்க்க வேண்டும், குட் டச்- பேட் டச் குறித்து விளக்க வேண்டும் எனவும், தேவையற்ற வெளிநபா்களிடம் பழகுவதை கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து விளக்கி பேசினாா். நிகழ்ச்சியில் பெற்றோா்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.