அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’
ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை கே.கே.நகா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட்டது.
மகுடஞ்சாவடி ஒன்றியம், தாரமங்கலம் கல்வி மாவட்டம், கே.கே.நகா் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வையாபுரி கல்வி, விளையாட்டு, மாணவா் மேம்பாடு, பள்ளி கட்டமைப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு உள்ளிட்ட அரசின் செயல்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கு கடந்த 6-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு அரசு வழங்கும் ‘பேரறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது’ கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு ஆகியோா் வழங்கினா்.
இந்த விருதுடன் பள்ளிக்கு ரூ. 10 லட்சத்துக்கான காசோலை, தலைமை ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப் பரிசு, கேடயம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும், கே.கே.நகா் பள்ளி 100 நாள் சவால் என்ற பெயரில் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் திறன் மேம்படும் வகையில் செயல்பட்ட பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.