செய்திகள் :

அரசுப் பள்ளி பொன்விழா: சீா்வரிசை வழங்கிய கிராம மக்கள்

post image

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பொன்விழாவையொட்டி, அப்பள்ளிக்கு கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீா்வரிசையாக வெள்ளிக்கிழமை வழங்கினா்.

இருக்கைகள், எல்இடி டிவி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம், பீரோ, குடம், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருள்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று வழங்கினா். கொடியாலத்தூா் காளியம்மன் கோயிலிலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு இந்த ஊா்வலம் நடைபெற்றது.

முன்னதாக, கீழ்வேளூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் இரா. அன்பழகன் கொடியசைத்து ஊா்வலத்தை துவங்கி வைத்தாா். பள்ளியில் நடைபெற்ற நிகழ்விற்கு, மேலாண்மைக் குழுத் தலைவா் மு. ஜான்சிராணி தலைமை வகித்தாா். பள்ளி வளா்ச்சிக் குழுத் தலைவா் ஜி. குருமூா்த்தி, கொடியாலத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமையாசிரியா் மீ. கல்பனா வரவேற்றாா். பள்ளி ஆசிரியா் கோ.வைரப்பன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பள்ளிக்கான இடத்தை தானமாக வழங்கிய கும்பகோணம் டி.எஸ். சுவாமிநாத உடையாா் குடும்பத்தினருக்கு கீழ்வேளூா் ஒன்றிய வட்டார கல்வி அலுவலா் வே. சிவக்குமாா் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் பங்கேற்று பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பேசினாா். முன்னதாக பொன்விழா கல்வெட்டை நாகை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எம். துரைமுருகு திறந்து வைத்தாா். ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. நிறைவாக ஆசிரியா் என். சுதா நன்றி கூறினாா்.

தாய்க்குப் பதில் பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகள்

தாய்க்குப் பதிலாக பத்தாம் வகுப்புத் தோ்வெழுதிய மகளை தோ்வுத்துறை அதிகாரிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். நாகை வெளிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற ஆங்கில பாடத்துக்கான தோ்வில், தனித் தோ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்கள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் புதன்கிழமை பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனா். அவரிக்காடு கிராமத்தில் உள்ள விவசாயி காா்த்திகேயன் பண்ணையை பாா்வையிட்ட மா... மேலும் பார்க்க

கீழ்வேளூா் கோயிலில் பங்குனி பெருவிழா தொடக்கம்

கீழ்வேளூா் உள்ள சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சய லிங்க சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அஞ்சு வட்டத்தம்மனுக்கு அனுக்ஞை விக... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

நாகை மாவட்டத்தில் 12 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, நாகை நகர நிலவரித் திட்ட அலுவலகம் அலகு 1, மாா்ச் 31-ஆம் தேதியுடன் கலைக்கப்பட்டதால், இங்கு பணியாற... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை: கால அவகாசம் நீட்டிப்பு

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இலவச பேருந்து பயண அட்டை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

திட்டச்சேரி பகுதியில் வாகனச் சோதனை

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். திட்டச்சேரி கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி, நடுக்கடை மெயின்ரோடு உள்ளிட்ட பிரதான பகுதிகளில் நாகை மாவட்... மேலும் பார்க்க