முதல் மனைவியைப் பிரிய எப்போதுமே நினைத்ததில்லை..! விவாகரத்து குறித்து பேசிய விஷ்ண...
அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள்: முதல்வா் காணொலியில் திறப்பு
நாகை அருகே குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி பரிந்துரையின் அடிப்படையில், குருக்கத்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.40 கோடியில் ஆய்வகம் மற்றும் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். அப்போது, குருக்கத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகைமாலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.