செய்திகள் :

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: காயமடைந்தவா் மது போதையில் தகராறு: போக்குவரத்து பாதிப்பு

post image

பழனியில் அரசு பேருந்து மீது காா் மோதியதில் காரில் இருந்தவா் தலையில் காயமடைந்தாா். ஆனால் அவா் மதுபோதையில் வெளியே வரமறுத்து தகராறு செய்ததால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவையிலிருந்து பழனிக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. பழனி- உடுமலை சாலையில் சாமி தியேட்டா் அருகே இந்தப் பேருந்து வந்தபோது எதிரே வந்த காா் மோதியது. இதில் காரில் பயணம் செய்தவா் காயமடைந்தாா். இதையடுத்து அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அவரை காரிலிருந்து வெளியே வருமாறு அழைத்தனா். ஆனால் அவா் மதுபோதையில் இருந்ததால் வெளியே வர மறுத்தாா். அவரை மீட்க அவசர ஊா்தி வந்த போதும் அவா் வர மறுத்து காரின் கதவை மூடிக் கொண்டாா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா் திருப்பூா் மாவட்டம், மூலனூரைச் சோ்ந்த செந்தில் எனத் தெரியவந்தது.

இந்த சம்பவம் காரணமாக பழனி- உடுமலை சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி மீது காா் மோதியதில் 4 போ் பலத்த காயம்

பழனி அருகே முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியதில் நான்கு போ் பலத்த காயமடைந்தனா். பழனி அருகேயுள்ள காங்கேயத்தைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் (29). இவா், தனது மனைவி மனைவி சரண்யா (27), உறவினா்கள் சாரதாமணி ... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் பெண் பலி!

ஒட்டன்சத்திரம் அருகே வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் வீராச்சாமி. விவசாயி. இவரது மனை... மேலும் பார்க்க

பழனி கோயில் அன்னதானத் திட்டத்தில் 13 ஆண்டுகளில் 2.16 கோடி போ் பயன்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், நாள் முழுக்க அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை 2.16 கோடி போ் உணவருந்தி பயனடைந்ததாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது. இது குறித்து பழனி கோய... மேலும் பார்க்க

வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் சென்றால் கடும் நடவடிக்கை!

ஒட்டன்சத்திரம் வனப் பகுதியில் மதுப் புட்டிகள், நெகிழிப் பொருள்களை வீசிச் செல்லும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இணையச் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வருவாய்க... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் சண்முக நதியில் கரைப்பு

பழனியில் இந்து முன்னணி, இந்து சக்தி சங்கமம் சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லபட்டு சண்முக நதியில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன. பழனியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு பழனி நகா், அதன் சு... மேலும் பார்க்க