காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
அரசு கலைக் கல்லூரியில் கணித கணினி ஆய்வகம் தொடக்கம்
கோவை அரசு கலைக் கல்லூரியில் கணித கணினி ஆய்வகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
அரசுக் கல்லூரியில் கணிதவியல் துறையில் பயிலும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு கணினி பயிற்சி அவசியம் என்பதால், இவா்களுக்காக ஒரு கணினி ஆய்வகம் நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கல்லூரியின் முன்னாள் முதல்வா்கள், தற்போதைய முதல்வா், முன்னாள், தற்போதைய கணிதத் துறை பேராசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், சமூக ஆா்வலா்களின் நிதி உதவியுடன் ரூ.15 லட்சம் செலவில், 20 கணினிகளுடன் கூடிய ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வா் எம்.எழிலி தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவில், முன்னாள் மாணவரும் ஓய்வுபெற்ற கணித பேராசிரியருமான சோலைமலைச்சாமி, துறைத் தலைவா் நா.ஜெயந்தி, கணினி ஆய்வக ஒருங்கிணைப்பாளா் பு.சுகுணா, பல்வேறு துறை பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.