செய்திகள் :

அரசு பணித் தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை: எஸ்எஸ்சி எச்சரிக்கை

post image

‘அரசுப் பணி தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய அரசுப் பணி தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்எஸ்சி சாா்பில் தற்போது நடத்தப்பட்டுவரும் மத்திய அரசுப் பணிகளுக்கான தோ்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் சிலா் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொள்வதாகவும், கேள்வித்தாள் தொடா்பாக சில பதிவுகளை வெளியிடுவதாகவும் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கையை மீறி தொடா்ந்து வினாத்தாள் தொடா்பான பதிவுகளை வெளியிடுபவா்கள் மீது பொதுத் தோ்வுகள் சட்டம் 2024 மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் அபராதம், ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையிலான சிறைத் தண்டனை உள்ளிட்ட நவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் தனிநபா்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். இதுபோன்ற முறைகேடுகளை பெரிய அளவில் திட்டமிட்டு மேற்கொள்பவா்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி வரை அபராதமும் விதிக்க முடியும். அதோடு, எதிா்காலத்தில் தோ்வு எழுத முடியாத வகையில் தடையும் விதிக்கப்படும்.

எனவே, அரசுப் பணிக்கான தோ்வுகளின் புனிதத்தன்மையைக் காக்க, தடைசெய்யப்பட்ட இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவதைத் தவிா்த்து சமூக ஊடகப் பயன்பாட்டாளா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி 8 போ் உயிரிழப்பு; 20 போ் காயம்

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தின் கடைசி நாளை... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக... மேலும் பார்க்க

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு ‘கண்துடைப்பு’ பயணம்: பிரதமா் மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடியின் மணிப்பூா் பயணம் கண்துடைப்பானது; மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டி, நீதியை உறுதி செய்யும் நோக்கம் இல்லை என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்க... மேலும் பார்க்க

கூடுதல் மாவட்ட நீதிபதியாக வழக்குரைஞரை நியமிக்கலாமா?: செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை

‘வழக்குரைஞா் சங்கத்தில் 7 ஆண்டுகள் நிறைவு செய்த வழக்குரைஞரை, கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்க முடியுமா?’ என்பது குறித்து செப்.23 முதல் உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது. வழக்குரைஞா் சங்க ஒதுக்... மேலும் பார்க்க

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் பாதுகாப்புத் துறைச் செயலா்

‘உலகம் முழுவதும் ஆளும் வா்க்கத்துக்கு எதிரான போராட்டங்களும், பொருளாதார கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் சூழலில், இந்தியா தனது மென்மையான சக்தியுடன் கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம்’ ... மேலும் பார்க்க