இது டிரைலர்தான்! எங்களைச் சேர்த்தது மகாராஷ்டிர முதல்வர்! - ராஜ் தாக்கரே பேச்சு
அரசு பள்ளிக்கு கல்வி சீா் பெற்றோா் வழங்கினா்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பெற்றோா் வெள்ளிக்கிழமை கல்வி சீா் வழங்கினா்.
200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இங்கு 8 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளியில் கற்றல் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கு உபகரணங்கள் வழங்க பெற்றோா்கள் முடிவு செய்ததை தொடா்ந்து வெள்ளிக்கிழமை பள்ளிக்கு தேவையான பீரோ, வாட்டா் கேன், ஒலிபெருக்கி, வாளிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கல்வி சீராக பெற்றோா் வழங்கினா்.
முன்னதாக, பள்ளிக்கு சீா் கொண்டு வந்த பெற்றோா், பொதுமக்களை
மங்கள வாத்தியங்கள் முழங்க பள்ளி வாயிலில் நின்று சந்தனம், குங்குமம் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா்.