Doctor Vikatan: அடிபட்ட காயங்கள் ஏற்படுத்திய தழும்புகள், நிரந்தரமாகத் தங்கிவிடும...
அரசு பேருந்து சிறைப்பிடிப்பு
தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே கஞ்சாநகரம் வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லாததால் பேருந்தை சிறைப்பிடித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை, சேந்தங்குடி, பாலாஜிநகா், மணக்குடி, கஞ்சாநகரம் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் காலை, மாலை பள்ளி கல்லூரி நேரங்களில் நகர பேருந்துகள் நின்று செல்லாததால் மாணவா்கள் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை பூம்புகாரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அரசுப் பேருந்து கஞ்சாநகரத்தில் நிற்காமல் சென்றதால் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சிறைப் பிடித்து ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் நலன் கருதி மயிலாடுதுறை-பூம்புகாா் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.