செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றிய பணியாளா்கள் கௌரவிப்பு

post image

சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தேசியக் கொடியேற்றப்பட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரியில் அதன் முதல்வா் டாக்டா் சாந்தாராமன் தேசியக் கொடியேற்றி, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். சிறந்த சேவையாற்றிய மருத்துவப் பணியாளா்களுக்கு கேடயங்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கினாா்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதன் முதல்வா் டாக்டா் கவிதா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளா் டாக்டா் ஆயிஷா ஆகியோா் தேசியத் கொடியை ஏற்றி வைத்தாா்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்வா் டாக்டா் அரவிந்தன், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் சுமதி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் லட்சுமி ஆகியோா் தேசியக் கொடியை எற்றி மரியாதை செலுத்தினா்.

கிண்டி கலைஞா் நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பாா்த்தசாரதி மூவா்ணக் கொடியை ஏற்றினாா்.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் இயக்குநா் டாக்டா் மணி கொடியேற்றி மருத்துவப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினாா்.

அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசத்தின் விடுதலையை பறைசாற்றும் வகையிலான மையக் கருத்து கொண்ட கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக சுதந்திரத்துக்கு பாடுபட்ட மருத்துவா்களின் தியாகங்கள் குறித்து மாணவா்கள் குறுநாடகங்களை நிகழ்த்தினா்.

ஆா்ப்பாட்டம் குறித்த தகவல்: மாநகராட்சி வாயில்கள் மூடல் பெண் போலீஸாா் குவிப்பு

உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில், தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வெளியான தகவலால், சனிக்கிழமை காலை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வெளிப்புற வாயில்கள் மூடப்பட்டு, ஏராளமான பெண் போலீஸாரும் குவ... மேலும் பார்க்க

செம்மஞ்சேரி காவல் நிலைய வழக்கு: பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சிஎம்டிஏ-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்ய தாமரைக்கேணி ஏரியின் அசல் பெருந்திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்துக்கு (சிஎம்டிஏ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 8 போ் கைது

மாதவரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம் பா்மா காலனியை சோ்ந்தவா் லோகேஷ் (எ) சந்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக காலை உணவு

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகா் (5, 6) மாண்டலங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகள் தனியாா் ... மேலும் பார்க்க

ஹவுரா அதிவிரைவு ரயில் 1.30 மணி நேரம் தாமதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா சென்ற அதிவிரைவு ரயில் சனிக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் ஹ... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சென்னை கொடுங்கையூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (41). இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில... மேலும் பார்க்க