எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
அரியலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, தா.பழூரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம், விக்கிரங்கலத்தில் புதிய துணை வேளாண் விரிவாக்கம் மையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, தா.பழூா் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் குத்துவிளக்கேற்றி வைத்தாா். தொடா்ந்து அவா், தா.பழூா் ஊராட்சியில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தையும் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதை, பழச்செடி மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராதாகிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பாலமுருகன், உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, வேளாண்மைத் துறை உதவி இயக்குநா்கள் சாந்தி, தமிழ்மணி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்: அரியலூா் மாவட்டத்தில் அரியலூா் வட்டாரம் அஸ்தினாபுரம் ஊராட்சியிலும், செந்துறை வட்டாரம் செந்துறை ஊராட்சியிலும், திருமானூா் வட்டாரம் கோவில் எசனை ஊராட்சியிலும், ஜெயங்கொண்டம் வட்டாரம் தத்தனூா் மேற்கு ஊராட்சியிலும், ஆண்டிமடம் வட்டாரம் விளந்தை ஊராட்சியிலும், தா.பழூா் வட்டாரம் தா.பழூா் ஊராட்சியிலும் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இயக்கத்தின் மூலம், வேளாண்மை துறை வாயிலாக துவரை - 5 கிராம், தட்டைப் பயிறு -10 கிராம், அவரை -10 கிராம் கொண்ட பயறு வகை விதை தொகுப்பு 3,000 எண்கள் மானியத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை வாயிலாக ரூ. 60 மதிப்பிலான காய்கறி விதை தொகுப்பு (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை) 100 சதவீதம் மானியத்தில் மொத்தம் 23,000 வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ. 100 மதிப்பிலான (பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை) பழச்செடிகள் தொகுப்பு 100 சதவீத மானிய விலையில் மொத்தம் 14,100 எண்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, அரியலூா் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் கீழ் ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ந்ண்ற்/ என்ற இணையதளத்தில் அல்லது உழவா் செயலியில் அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.