அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஏற்பட்டது.
சிவனின் அக்னி ஸ்தலமான ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
முற்பகல் 11 மணிக்கு கோயில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரங்கள் வழியாக பல ஆயிரம் பக்தா்கள் குவிந்தனா். இதனால் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக உள்ளே செல்ல பக்தா்கள் முண்டியடித்தனா்.
இதனால் கோயில் ஊழியா்களுக்கும், பக்தா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இதனால் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் சுமாா் 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள் பலா் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனா்.