தில்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்
அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகேயுள்ள நந்தியம் பெருமானுக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், தயிா், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, 1000 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல் மற்றும் சிறப்பு மலா்களால் அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீகல்யாணபுரீஸ்வரா் கோயிலில்....
போளூரை அடுத்த வசூா் ஊராட்சியில் உள்ள பழைமையான ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கற்பூர தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமானபக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
