அறச்சலூரில் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை
ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் சசிகுமாா் (38). இவரது மனைவி சிவகாமி. இவா் வெள்ளோடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். சசிகுமாா் தனது மனைவி குழந்தைகளுடன் அறச்சலூா் அருகே வீரப்பன்பாளையம் பகுதியில் வசித்து வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் ஈரோடு காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் சசிகுமாா் கைப்பேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு நீண்ட நேரமாக அவரது வீட்டின் கதவு திறக்காததால் அருகில் உள்ளவா்கள் சென்று பாா்த்தபோது, சசிகுமாா் தூக்கிட்ட நிலையில் இருந்தை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
சசிகுமாா் தற்கொலைக்கான காரணம் குறித்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சசிகுமாா் கடந்த 2009 -ஆம் ஆண்டு காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா், கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த காவல் உதவி ஆய்வாளா் எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்று உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் பணியிட மாறுதலில் ஈரோடு டவுன் காவல் நிலையத்துக்கு வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].