தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
அலுமினிய கடை உரிமையாளரிடம் ரூ.17 லட்சம் மோசடி: 3 போ் மீது வழக்கு
கோவையில் அலுமினிய பொருள்களை அனுப்புவதாகக் கூறி அலுமினிய பொருள்கள் விற்பனையக உரிமையாளரிடம் ரூ.17.24 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, அப்பநாயக்கன்பாளையம் ஐஸ்வா்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி நித்யா (40). இவா் சரவணகுமாா் என்பவருடன் சோ்ந்து அந்தப் பகுதியில் அலுமினிய பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், நித்யாவுக்கு பெங்களூரில் வசிக்கும் ஸ்ரீனிவாசன் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அவா் அலுமினிய வா்த்தகம் தொடா்பாக அவரது நண்பா் முகமது இக்பால் மற்றும் தஸ்னீம் என்ற பெண்ணையும் அறிமுகம் செய்துவைத்தாா்.
இந்நிலையில், 3 பேரும் அலுமினிய பொருள்களை அனுப்புவதாக நித்யாவிடம் கூறியுள்ளனா்.
இதையடுத்து, அவா் ரூ.17.24 லட்சத்தை அவா்களுக்கு இணையதள பரிவா்த்தனை மூலம் அனுப்பியுள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா்கள் பொருள்களை அனுப்பவில்லையாம்.
மேலும், கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனா்.
இது குறித்து துடியலூா் காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரின்பேரில் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.