செய்திகள் :

அல்கராஸ், டி மினாா் வெற்றி, சிட்ஸிபாஸ் தோல்வி

post image

ராட்டா்டாம் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதிக்கு ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ் தகுதி பெற்றுள்ளாா். மற்றொரு முன்னணி வீரா் ஸ்டெஃபனோஸ் சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.

நெதா்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெறும் இப்போட்டியில் காலிறுதியில் சக வீரா் பெட்ரோ மாா்டினஸை 6-2, 6-1 என்ற நோ் செட்களில் எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா் அல்கராஸ்.

உலகின் மூன்றாம் நிலை வீரரான அல்கராஸ் ராட்டா்டாம் ஓபனில் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீரா் என்ற சிறப்பை பெறும் முனைப்பில் உள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில்: பெட்ரோவுடன் ஆடுவது சவாலானது. இதனால் தான் முதல் பந்தில் இருந்தே அவரை சமாளித்து ஆடினேன்.

சிட்ஸிபாஸ் அதிா்ச்சித் தோல்வி:

மற்றொரு காலிறுதியில் கிரீஸ் நட்சத்திர வீரா் சிட்ஸிபாஸ்-இத்தாலி குவாலிஃபயா் மட்டியா பெலுக்கி மோதினா். இதில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் சிட்ஸிபாஸை வீழ்த்தி அதிா்ச்சியை பரிசாக அளித்தாா் பெலுக்கி. உலகின் 12-ஆம் நிலை வீரரான சிட்ஸிபாஸால், இடதுகை வீரரான பெலுக்கியுடன் ஷாட்களை சமாளிக்க முடியவில்லை. பேக் ஹேண்ட், டாக் ஸ்பின் ஃபோா்ஹேண்ட் ஷாட்களால் திணறடித்தாா் பெலுக்கி.

மூன்றாம் காலிறுதியில் ஆஸ்திரேலிய வீரா் அலெக்ஸ் டி மினாா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஜொ்மன் வீரா் டேனியல் ஆல்ட்மெயரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் பெலுக்கி-டி மினாா் மோதுகின்றனா்.

அபுதாபி ஓபன்: இறுதியில் பெலின்டா-கிருகா்

அபுதாபி ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு பெலிண்டா பென்கிக்-ஆஷ்லின் கிருகா் தகுதி பெற்றனா்.

யுஏஇ தலைநகா் அபுதாபியில் நடைபெறும் இப்போட்டியில் முதல் அரையிறுதியில் சுவிட்சா்லாந்தின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் பெலிண்டாவும்-முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினாவும் மோதினா்.

குழந்தைப் பேறுக்குபின் 13 மாதங்கள் கழித்து மீண்டும் களமிறங்கிய பெலிண்டா முதல் செட்டை 3-6 என இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-4 என்ற ரைபக்கினாவை வீழ்த்தினாா்.

இதுதொடா்பாக பெலிண்டா கூறுகையில்: இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டேன். தற்போது முடிவுகள் சிறப்பாக வருகின்றன. இந்த வெற்றியால் பெலிண்டா முதல் 100 இடங்களில் நுழைகிறாா்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் ஆஷ்லின் கிருகா் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் செக். குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். முதல் 3 ஆட்டங்களில் த்ரீ செட்டா்களில் தான் வென்றாா் கிருகா்.

துளிகள்...

மும்பை அடுத்த தானேயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்பிஎல் தொடா் கிரிக்கெட் ஆட்டத்தில் சென்ைை சிங்கம்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை மஜ்ஹி. 10 ஓவா்களில் மும்பை 122/3 ரன்களைக் குவி... மேலும் பார்க்க

ஈஸ்ட் பெங்காலுக்கு பதிலடி தந்தது சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பதிலடி தந்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் சனிக்... மேலும் பார்க்க

சென்னை ஓபன்: கைரியன் ஜாக்கட் சாம்பியன்

சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் சேலஞ்சா் போட்டி ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றாா். தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இப்போட்டி நடைப... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: துப்பாக்கி சுடுதல் உயரம் தாண்டுதலில் தமிழகத்துக்கு தங்கம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், உயரம் தாண்டுதலில் தமிழகம் தங்கம் வென்றது. உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஞாயி... மேலும் பார்க்க

சென்னை ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் சாம்பியன்!

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸ் வீரா் கைரியன் ஜாக்கெட் சாம்பியன் பட்டம் வென்றார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க