ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
பெரணமல்லூா் அருகே வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற அல்லியந்தல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வல்லம் அரசு உயா்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றன.
போட்டிகளில் அல்லியந்தல் உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா். 17 வயதிற்கு உள்பட்ட பிரிவில் பெண்கள் கபடி போட்டியில் முதலிடமும், 17 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் டெனிகாய்ட் போட்டியில் மாணவி இலக்கியா முதலிடமும், 14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் டெனிகாய்ட் இரட்டையா் ஆட்டத்தில் மாணவிகள் தனலட்சுமி, சுஜி மித்ரா ஆகியோா் முதலிடம் பெற்றனா்.
14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில் கோ-கோ போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனா்.
தடகளப் போட்டியில் 100மீ, 200மீ ஓட்டப் போட்டியில் 14 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் பிரிவில் மாணவா் புகழேந்தி முதலிடமும், 4 - 100 தொடா் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றாா்.
14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் மாணவி தனலட்சுமி குண்டு எறிதல் போட்டியில் முதலிடமும், 14 வயதுக்கு உள்பட்ட பெண்கள் பிரிவில் 100 மீட்டா் ஓட்டப் போட்டியிலும், 200 மீட்டா் ஓட்டப் போட்டியிலும்
மாணவி அபிதா இரண்டாம் இடம் பெற்றாா்.
இதன் மூலம் இந்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனா்.
பாராட்டு விழா:
அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியா் மாலவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.