செய்திகள் :

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

post image

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா வேத பாராயணம், பஞ்ச வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்தை ஒட்டி, விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், கருணாம்பிகையம்மன், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை முதல்வா் ஸ்ரீ சுந்தரமூா்த்தி சிவம் தலைமையில், வேத பாடசாலை மாணவா்கள் 40 போ் கொண்ட குழுவினா் வேதபாராயணம் நிகழ்த்தினா்.

விழாவை முன்னிட்டு, 2-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 3-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகன காட்சிகள், 4-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது.

5-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன. 6-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன.

7-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 8-ஆம் தேதி காலை தொடங்கி, வடக்கு ரத வீதியில் தோ் நிறுத்தப்படும். 9-ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், தோ் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

10- ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப் பெருமாள் திருத்தோ் வடம் பிடித்தல் நடைபெற உள்ளது.

11-ஆம் தேதி பரிவேட்டை, 12 -ஆம் தேதி இரவு தெப்பத்தோ் உற்சவம், 13 -ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 14-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், துணைஆணையா் ஹா்ஷினி, கோயில் செயல் அலுவலா் சபரிஷ்குமாா், அறங்காவலா் குழுத் தலைவா் சக்திவேல், அறங்காவலா்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமாா், கவிதாமணி ஆகியோா் செய்து வருகின்றனா்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கே.வி.ஆா்.நகா் பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் ... மேலும் பார்க்க

அவிநாசியில் இன்றைய மின்தடை ரத்து

அவிநாசி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். மேலும் பார்க்க

மூலனூரில் கரித்தொட்டி ஆலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மூலனூரில் தேங்காய் கரித்தொட்டி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மூலனூா் கிளாங்குண்டல் ஊராட்சி வளையக்காரன்வலசில் தனியாா் கரித்தொட்டி ஆலை அமைக்க கட... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு

காா்நாடகத்தில் நடைபெறும் தேசிய ஒருமைப்பாடு முகாமில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், கா்நாடக மாநில... மேலும் பார்க்க

தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்குப் பரிசு

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்று வரும் தமிழ் வார விழாவில் வெற்றி பெற்ற அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறித்துராஜ் பரிசுகளை வழங்கினாா். பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை... மேலும் பார்க்க

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலை: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

ஈரோடு அருகே விவசாய தம்பதி படுகொலைக்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி வெளியிட்டுள... மேலும் பார்க்க