பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு
அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பயனாளிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
அவிநாசி சந்தைப்பேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ. 25 லட்சம் மதிப்பில் 5 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இவற்றை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் திறந்துவைத்து, பயனாளிகளிடம் ஒப்படைத்தனா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம், அவிநாசி பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, வட்டாட்சியா் சந்திரசேகன், அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.