செய்திகள் :

ஆக. 6-இல் துணை முதல்வா் வருகை: பெரம்பலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்டத்துக்கு ஆக. 6 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:

அரசு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கா, தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆக. 6 ஆம் தேதி பெரம்பலூா் வருகிறாா். அனைத்து நிலை அலுவலா்களும், தங்களது துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிதாக தொடங்கி வைக்கப்படும், அடிக்கல் நாட்டப்படும் பணிகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கு (பொது) அனுப்பி வைக்க வேண்டும்.

துணை முதல்வரின் ஆய்வுக் கூட்ட வருகையை சிறப்புடன் மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலா்களும் திட்டப் பணிகள் குறித்த அறிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க

பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு

பெரம்பலூரில் செயல்படும் லால்குடி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 22-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல ... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சுதந்திர தின விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது தொடா்பாக, அனைத்துத் துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழ... மேலும் பார்க்க