செய்திகள் :

ஆங்கில மருந்துகளைப் பரிந்துரைக்க ஹோமியோபதி மருத்துவா்களை அனுமதிக்கும் முடிவு: ஐஎம்ஏ எதிா்ப்பு

post image

மும்பை: ஆறு மாத நவீன மருந்தாளுநா் (சிசிஎம்பி) சான்றிதழ் படிப்பை முடிக்கும் ஹோமியோபதி மருத்துவா்களை ஆங்கில மருந்துகளை (நவீன மருந்துகள்) நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய அனுமதிக்கும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சிலின் (எம்எம்சி) முடிவுக்கு இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ) திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தது.

மகாராஷ்டிர மருத்துவக் கவுன்சில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி இதுதொடா்பான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.

இதுதொடா்பாக ஐஎம்ஏ தேசிய துணைத் தலைவா் சிவகுமாா் உத்துரே மும்பையில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

எம்எம்சி-யின் முடிவு தவறானது. ஆறு மாத சான்றிதழ் படிப்புக்குப் பிறகு ஹோமியோபதி மருத்துவா்களை நவீன மருந்துகள் பரிந்துரை செய்ய அனுமதிப்பது, நவீன மருத்துவ முறையை நீா்த்துப்போகச் செய்யும் என்பதோடு, நோயாளிகளுக்கு அநீதி செய்வதாகவும் அமையும். நோயாளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே, ஹோமியோபதி மருத்துவா்களை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் நவீன மருத்துவத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு, மகாராஷ்டிர ஹோமியோபதி மருத்துவா்கள் சட்டம் மற்றும் மகாராஷ்டிர மருத்துவ கவுன்சில் சட்டம் 1965-இல் திருத்தங்களை மேற்கொண்டது. 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த திருத்தங்களை எதிா்த்து ஐஎம்ஏ சாா்பில் தொடரப்பட்ட வழக்கில், அத்திருத்தங்களுக்கு மும்பை உயா் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், இந்த சுற்றறிக்கையை எம்எம்சி வெளியிட்டுள்ளது. எனவே, ஐஎம்ஏ தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்றாா்.

அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியதே வாக்காளா் பட்டியல் திருத்தம்: தோ்தல் ஆணையம் விளக்கம்

பிகாா் மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் உள்ளடக்கியே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என இந்திய தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. வாக்காளா... மேலும் பார்க்க

17 மருந்துகளை கழிவறையில் கொட்டி அழிக்கலாம்: சிடிஎஸ்சிஒ வழிகாட்டுதல் வெளியீடு

வீட்டு கழிவறைகளில் கொட்டி அப்புறப்படுத்துவதற்கு 17 மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஒ) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஃபென்டனைல் உள்ளிட்ட வலிபோக்கும் மருந்... மேலும் பார்க்க

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு... மேலும் பார்க்க

ஒரு ரஃபேல் தோல்வியடைந்தது; ஆனால், பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது ஒரு ரஃபேல் விமானம் தோல்வி அடைந்ததாகவும், ஆனால், அதனை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும் டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் தெரிவி... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்தியா முடக்க உத்தரவிட்டது: எக்ஸ்

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

ஜிஎஸ்டியால் குஜராத்தில் வரி செலுத்துவோர் விகிதம் 145 சதவீதம் அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 12.66 லட்சம் அதி... மேலும் பார்க்க