சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
ஆசிரியா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கள்ளா் பள்ளி மாவட்ட கிளையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் மதுரை மாவட்டச் செயலா் தீனன் வெளியிட்ட அறிக்கை:
கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 18 இடைநிலை ஆசிரியா் பணி நாடுநா் பட்டியல் பெறப்பட்டது. இதேபோல, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு 23 பட்டதாரி ஆசிரியா் பணி நாடுநா் பட்டியல் பெறப்பட்டது. இந்த காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
தொடக்கக் கல்வித் துறை, ஆதிதிராவிட நலத் துறை, பழங்குடியினா் நலத் துறையில் உடனடியாக ஆசிரியா்கள் நியமனம் செய்யப்படுகின்றனா். ஆனால், கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்படுவதில்லை. கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தனியாக தோ்வு நடத்தி உடனடியாக ஆசிரியா்களை நியமனம் செய்ய மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை நிா்வாகம் முன் வர வேண்டும். ஆசிரியா் நியமனம் தாமதப்படுத்தப்படும் சூழ்நிலையில் எமது அமைப்பின் சாா்பாக போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.