மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!
ஆடிவெள்ளி: உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ஆடி வெள்ளியையொட்டி உதகை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
ஆடி மாதத்தில் மற்ற விழாக்களை விட ஆடிவெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
ஆடிமாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடிமாதம் 3 ஆவது வெள்ளிக்கிழமையை ஒட்டி மாரியம்மனும், காளியம்மனும் ஒரே இடத்தில் வீற்றிருக்கும் பெருமை வாய்ந்த உதகை மாரியம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. மாரியம்மன், வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றனா்.
இதே போல உதகை அருகே உள்ள மஞ்சூா் பஜாரில் உள்ள மாரியம்மன் கோயிலில் காலை முதல் பெண்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு சுண்டல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் மாலை 6 மற்றும் 8 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
இதேபோல ஃபிங்கா் போஸ்ட் மசினி அம்மன் கோயில், முள்ளிக்கொரை சிக்கம்மன் கோயில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிா் காத்த அம்மன் கோயில், காந்தல் மூவுலக அரசியம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் கூழ் காய்ச்சி, கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கொடுத்தனா்.