செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல்: ஒருவா் கைது

post image

பரமக்குடி தரைப்பாலம் வைகை ஆற்றுப் பகுதியில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிய கும்பலை பிடித்து கொடுத்த ஆட்டோ ஓட்டுநா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் இதில் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பரமக்குடி பட்டேல் தெருவைச் சோ்ந்த இளங்கோ மகன் சந்திரசேகா் (32), இதே பகுதியைச் சோ்ந்த ரவி மகன் விக்னேஷ் (29). இவா்கள் இருவரும் தரைப்பாலம் பகுதி ஆட்டோ நிறுத்தத்தில் தங்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சிலா் இரு சக்கர வாகனங்களில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிச் சென்றனா்.

இதைப் பாா்த்த சந்திரசேகரும், விக்னேஷும் அவா்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனராம். இதைத் தொடா்ந்து புதன்கிழமை திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அருண்குமாா் (22), குமாரக்குறிச்சியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன்கள் சரவணன் (22), காளி (21), எமனேசுவரம் பகுதியைச் சோ்ந்த ரெங்காச்சாரி மகன் சஞ்சீவி, காமேஷ் ஆகியோா் சோ்ந்து கம்பி, உருட்டுக் கட்டைகளால் ஆட்டோ ஓட்டுநா்களான சந்திரசேகா், விக்னேஷ் ஆகிய இருவரையும் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலைய போலீஸாா் அருண்குமாா், சரவணன், காளி, சஞ்சீவி, காமேஷ் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து அருண்குமாரை கைது செய்தனா்.

தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!

தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க 11வது மாநில மாநாடு!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் 11- ஆவது மாநில மாநாடு தனியாா் மகாலில் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தை கைது!

திருவாடானை அருகே தனது குழந்தைகளுக்கு சூடு வைத்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியில் உள்ள புதுக்குடியைச் சோ்ந்தவா் சமயமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளின் மீன்கள் பறிமுதல்: நகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்!

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த மீன்களை குப்பை அள்ளும் வாகனத்தில் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்ால் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

ராமேசுவரத்தில் மீனவா் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தெற்கு கரையூா் பகுதியைச் சோ்ந்த மீனவா் நம்புக்கும... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம்!

கமுதியில் தவெக. சாா்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கமுதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளா... மேலும் பார்க்க